அமெரிக்காவை ஓவர்டேக் செய்த சீனா... உலகின் பெரும் பணக்கார நாடாக உயர்ந்தது!

 
சீனா அமெரிக்கா

வல்லரசு நாடான அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி பெரும் பணக்கார நாடாக முன்னேறியது சீனா. இதனை மெக்கின்சி குளோபல் எனும் ஆய்வு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2000ஆம் ஆண்டில் சீனா உலக வர்த்த நிறுவனத்தில் உறுப்பினரான பின் பெரும் வளர்ச்சி கண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  2000ஆம் ஆண்டில் சீனாவின் சொத்து மதிப்பு 7 லட்சம் கோடி டாலராக இருந்தது. இந்த சொத்துமதிப்பு 2020 ஆண்டில் சீனாவின் சொத்து மதிப்பு 120 லட்சம் கோடி டாலராக அதிகரித்துள்ளது.

China and the United States of America: The 21st Century's Great Game |  Business Standard News

இந்தக் காலக்கட்டத்தில் அமெரிக்காவின் சொத்துமதிப்பு 90 லட்சம் கோடி டாலராக உள்ளது. ஆகவே அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா உலகின் பெரும் பணக்கார நாடாக உயர்ந்துள்ளது. அதேபோல ஒட்டுமொத்த உலகின் சொத்து மதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் மூன்று மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது. அதாவது 2000ஆம் ஆண்டில் 156 லட்சம் கோடி டாலராக இருந்த உலகின் சொத்து மதிப்பு 2020ஆம் ஆண்டில் 514 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது. 

The China Challenge Can Help America Avert Decline | Foreign Affairs

இதில் மூன்றில் ஒரு பங்கு வளர்ச்சிக்கு சீனாவின் சொத்துமதிப்பு உயர்ந்ததே காரணம் என மெக்கின்சி ஆய்வறிக்கை சொல்கிறது. உலகின் மொத்த வருமானத்தில் 60 சதவீதத்துக்கும் மேல் 10 நாடுகளுக்கு மட்டுமே சொந்தமாக உள்ளது. அதில் அமெரிக்காவும் சீனாவும் பிரதான இடம்பிடித்துள்ளன. அதிலும் குறிப்பாக அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு சொத்துகள் 10 பணக்கார குடும்பங்களுக்குச் சொந்தமானவை தான். உலகின் மொத்த சொத்து மதிப்பில் 68 சதவீதம் ரியல் எஸ்டேட் துறையில் இருக்கிறது.