அரசு ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் .. இல்லையென்றால் சம்பளம் கட்..

 
கொரோனா நெகடிவ்

அரசு ஊழியர்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு செல்வோர் கொரோனா பிசிஆர் பரிசோதனை முடிவு சான்றிதழ்களை  கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும் என சார்ஜா மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.

அதன்படி, சார்ஜா அரசுத்துறை அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அரசு சேவைகளை பெறுவதற்காக  அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்றும்,  அதோடு தொற்று இல்லை என்ற பிசிஆர்  பரிசோதனை முடிவு சான்றிதழை  கையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா பரிசோதனை

அதில், 2 டோஸ் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொண்டவர்கள் 14 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட பிசிஆர் முடிவுகளையும், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் 7 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளைவும் கையில் கொண்டு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நெகடிவ்

மேலும் சான்றிதழ் இல்லாமல், தொலைதூரத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தகுந்த காரணத்தை சொல்ல வெண்டும் என்றும், அவ்வாறு சான்றிதழ்களோ, சரியாகான காரணமோ அளிக்கவில்லை என்றால் ஆண்டு சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.