ஜப்பான் நிலநடுக்கம்...அதிகரிக்கும் பலி எண்ணிக்கை - 24 ஆக உயர்வு

 
japan japan

ஜப்பானில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.

ஜப்பானில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  இதனை தொடர்ந்து அடுத்தடுத்து நுற்றுக்கணக்கான நில அதிர்வுகள் ஏற்பட்டன. 
ஜப்பானில் ஒரே நாளில் 155 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டன/ ஜப்பானின் ஹோண்ஷு பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஜப்பானின் பல்வேறு பகுதிகளில் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கின. பல்வேறு கட்டிடங்கள் மற்றும் வீடுகள் இடிந்து விழுந்தன. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கரையோர மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.  

japan

இந்த நிலையில், ஜப்பானில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.  தொடர்ந்து மீட்பு பணிகள் மற்றும் இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்ந்து வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.  நிலநடுக்கத்தை தொடர்ந்து விடப்பட்ட சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.