“இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்”... ட்ரம்ப் அறிவிப்பு

 
“இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்”... ட்ரம்ப் அறிவிப்பு “இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்”... ட்ரம்ப் அறிவிப்பு

இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

Donald Trump: Presidency, Political Rise, Life, Career, Businesses -  Business Insider

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி மற்றும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன, இது அமெரிக்காவின் மத்தியஸ்தத்தால் நடந்தது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் இதை உறுதிப்படுத்தினார். இந்த போர் நிறுத்தம் மோதலை தணிக்க உதவும், ஆனால் காஷ்மீர் போன்ற தீர்க்கப்படாத பிரச்சினைகள் மற்றும் முந்தைய மீறல்களை தணிக்க உதவாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Image

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது எக்ஸ் தள பக்கத்தில், ``இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி மோதல் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். சூழ்நிலையை புரிந்து கொண்டு தாக்குதலை கைவிட்ட இரு நாடுகளுக்கும் எனது வாழ்த்துகள் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.