வேகமாக சுழலும் பூமி.. ஒரு விநாடியை இழக்கும் அபாயம்... எச்சரிக்கும் விஞ்ஞானிகள்...

 
பூமி

50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட  தற்போது பூமி சுழலும் வேகம் அதிகரித்திருப்பதாக இங்கிலாந்தின் தேசிய இயற்பியல்  ஆய்வத்தின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சூரியக்கோள்களில் பூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டு ,  சூரியனையும் சுற்றி வருகிறது.  அப்படி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணிநேரமும், சூரியனை சுற்றிவர 365 நாட்களும் ஆகிறது.  அப்படி பூமி தன்னைத்தானே சுற்றிகொள்ளும் இந்த 24 மணிநேரத்தில் தான் நமக்கு  இரவும், பகலும் மாறி மாறி வருகிறது.

பூமி

இந்நிலையில் தற்போது பூமி சுழலும் வேகம் அதிகரித்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.  50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது வேகமாக சுழன்று கொண்டிருக்கிறதாம். அதாவது பூமி சுழலும் வேகத்தில் ஒரு வினாடி மாறுபாடு இருப்பதாக கூறுகின்றனர்.  இதனை இங்கிலாந்தின் தேசிய இயற்பியல்  ஆய்வத்தின் விஞ்ஞானிகள் அணிக்கடிகாரத்தின் வாயிலாக கண்டுபிடித்துள்ளனர்.

பூமி

பூமியின் சுழற்சியில் உள்ள விநாடிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அணுக் கடிகாரத்தை விஞ்ஞானிகள் வைத்திருக்கின்றனர். இதில் 1972 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு  18 மாதங்களுக்கும் ஒரு முறை லீப் வினாடிகள் சேர்க்கப்பட்டு, பூமியின் சுழற்சிக்கு ஏற்ப வைக்கப்பட்டுள்ளது.  அந்த அணுக்கடிகாரத்தின் வாயிலாகவே தற்போது  பூமியின் சுழலும் வேகம் அதிகரித்திருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

மேலும், பூனியின் சுழற்சி வேகம் இன்னும் அதிகரித்தால், நாம் ஒரு விநாடியை  குறைக்க வேண்டியிருக்கும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.  சந்திரனின் ஈர்ப்பு விசை, பெருங்கடல்கள், வளிமண்டல இயக்க மாற்றம் போன்ற காரணங்களால் பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.