கரிபியன் கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

கரிபியன் கடற்பரப்பில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், பல்வேறு தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரிபியன் கடற்பரப்பில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஹோண்டுராஸுக்கு வடக்கே 32 கி.மீ. தொலைவில் கரிபியன் கடலில் இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 8.0 ஆக பதிவாகியுள்ளது. இதனால் கேமன் தீவுகள், ஜமைக்கா, கொலம்பியா, போர்ட்டோ ரிக்கோ உள்ளிட்ட கரிபியன் கடலை ஒட்டிய தீவுகள் மற்றும் நாடுகளுக்கு சர்வதேச சுனாமி தகவல் மையம் சுனாமி அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நாடுகள் மற்றும் தீவுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடற்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.