இந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்! - மக்கள் பீதி!

 
earth

இந்தோனேசியாவில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர்..

இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது வாடிக்கையான ஒன்று. அந்நாட்டின் இருப்பிட அமைப்பின் காரணமாக அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று அதிகாலையில், இந்தோனேசியாவில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்நாட்டின் கெபுலாவான் பதுவில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 புள்ளிகளாக பதிவானது. நிலநடுக்கத்தால் வீடு, கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வீதிகள் மற்றும் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். 

இந்நிலையில், அதே இடத்தில் சில மணி நேரங்களுக்கு பிறகு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது. அடுத்தடுத்த ஏற்பட்ட நிலநடுக்கன்களால் அந்நாட்டு மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.