ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

 
earth

ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அந்நாட்டிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஜப்பான் நாட்டில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் ஹோண்ஷு பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஜப்பானின் பல்வேறு பகுதிகளில் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். 

சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கரையோர மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஹோண்ஷு பகுதிகளில் அடுத்தடுத்த ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.