ஃபேஸ்புக், இன்ஸ்டகிராமை அடித்து நொறுக்கிய எக்ஸ்(X) - எலான் மஸ்க் வெளியிட்ட தகவல்..

 
elon musk

உலகம் முழுவதும் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம்  உள்ளிட்ட வலைதளங்களை விட எக்ஸ் தளத்தை  3 மடங்கு அதிக பயனர்கள் பயன்படுத்தியுள்ளதாக  எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.  

உலகின் மிகப்பெரிய சமூக வலைதள நிறுவனமான மெட்டா,  ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், த்ரெட்ஸ், மெசெஞ்சர் உள்ளிட்ட பல  வலைதள சேவைகளை வழங்கி வருகிறது.  இந்த வலைதளங்களுக்கு உலகம் முழுவதிலிருந்தும் ஏராளமான பயனாளார்கள் உள்ளனர். அதேநேரம் இந்த அத்தனை சமூக வலைதளங்களுக்கும் இணையான பயனர்களை எக்ஸ் தளமும் கொண்டிருக்கிறது.  முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட இந்த தளத்தை, உலகின் மிகப்பெரிய பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளருமான எலான் மஸ்க் கைப்பற்றினார். அதன் பின்னரே இந்த தளம் எக்ஸ் ( X) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.  

facebook

எக்ஸ் தளத்தை கைப்பற்றிய பின்னர் பல்வேறு அதிரசி மாற்றங்களை கொண்டுவந்த எலான் மஸ்க், அதேநேரம் போட்டி நிறுவனங்களாக பார்க்கப்படும் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் தளங்களை அவ்வப்போது விமர்சித்து நேரடியாக தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அந்தவகையில் அண்மையில் ( கடந்த மார்ச் மாதம்) மெட்டா நிறுவன தளங்கள் முடங்கிய போது அதனை கிண்டல் செய்து எலான் மக்ஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

 இந்நிலையில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் தளங்களை விட 3 மடங்கு அதிகம் பேர் visit செய்த தளமாக  எக்ஸ் இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தள பதிவில், “இணையதள போக்குவரத்து கண்காணிப்பு தளமான Similarweb இன் கூற்றுப்படி, இன்ஸ்டகிராம் மற்றும் ஃபேஸ்புக் பயனர்களை விட  உலகளவில் அதிக பார்வையாளார்களை எக்ஸ்  (X)தளம்   பெற்றிருக்கிறது.  

ஃபேஸ்புக்கின் 12.44 பில்லியன் மற்றும் இன்ஸ்டாகிராமின் 5.798 பில்லியனுடன் ஒப்பிடும்போது X ஜூன் மாதம் முழுவதும் 13.14 பில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. X ஆனது Facebook ஐ விட கிட்டத்தட்ட 3 மடங்கு தனிப்பட்ட பார்வையாளர்களைக் கொண்டிருந்தது.  எக்ஸ்(X)தளம் 3.127 பில்லியன் தனிப்பட்ட பார்வையாளர்களைக் கொண்டிருந்தது. பேஸ்புக்கில் 1.050 பில்லியன் தனிப்பட்ட பார்வையாளர்கள் உள்ளனர். இன்ஸ்டகிராம்  919 மில்லியன் தனிப்பட்ட பார்வையாளர்களைக் கொண்டுள்ளது. ” என்று குறிப்பிட்டுள்ளார்.