எத்தியோப்பியா நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 229 ஆக அதிகரிப்பு..

 
ethiopia

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 229 ஆக அதிகரித்துள்ளது. 

வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் கடந்த 21ம் தேதி கடும் கனமழை பெய்தது. குரிப்பாக கெஞ்சோ ஷாசா காஸ்டி மாவட்டத்தில் உள்ள கோபா மண்டலத்தில் கொட்டித்தீர்த்த பலத்த  மழையால் அங்கு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.  இந்த நிலச்சரிவில் சிக்கி பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்பட பலர் உயிரிழந்துள்ளனர்.  திங்கள் கிழமை பிற்பகல் வரை 55 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று(ஜூலை 23) காலை  நிலவரப்படி பலி எண்ணிக்கை 157 ஆக அதிகரித்தது. 

ethiopia

சம்பவப் பகுதியிலிருந்து 5 போ் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.  நிலச்சிரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசு மீட்புக் குழுவினருடன் ஏராளமான தன்னார்வ தொண்டு அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன.  எத்தியோப்பியா நிலச்சரிவில் தற்போது வரை 229 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்து பலர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.  எத்தியோப்பியாவில் நேரிட்டுள்ள மிக மோசமான இயற்கைப் பேரிடா் இது என்று கூறப்படுகிறது.

எத்தியோப்பியாவின் மழைக் காலத்தின்போது நிலச்சரிவுகள் ஏற்படுவது பொதுவானவை.  அதிலும்  ஜூலையில் தொடங்கி செப்டம்பர் நடுப்பகுதி வரை நிலச்சரிவுகள் ஏற்படுவது நீடிக்கும். இருப்பினும் தோண்ட தோண்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் சடலங்களாக மீட்கப்படுதும், பலர் தங்களது சொந்தங்களை இழந்து கதறும் காட்சிகளும் வெளியாகி அனைவரையும் கலங்கச் செய்கிறது.