பிரபல இசையமைப்பாளர் விமான விபத்தில் பலி - மனைவி, மகனும் உயிரிழப்பு

 
f

பிரபல இசையமைப்பாளர் பாலோ லா மூவி(flow la movie).  இவர் தனது மனைவி டிபி வொன் மெரி ஜிமென்ஸ் ஹர்சியா(31) மற்றும் மகன் ஜேடன்(4)  ஆகியோருடன் விமானத்தில் பயணித்துள்ளார்.  இவர்களுடன் சேர்த்து மொத்தம் ஒன்பது பேர் அந்த  விமானத்தில் பயணித்துள்ளனர்.  விமானம் அவசரமாக தரையிறங்கிய போது ஏற்பட்ட விபத்தில் 9 பேரும் உயிரிழந்துள்ளனர்.

f2

 தனது இசையின் மூலம் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தவர் பாலோ லா  மூவி.  இவரின் இயற்பெயர் ஜோஷி ஏஞ்சல் ஹர்னடின்ஸ்.   தனித்துவமான இசையால் உலகம்  முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் இவருக்கு.

f3

 சாண்டோ டொமிங்கோவில் உள்ள லாஸ் அமெரிக்கா விமான நிலையத்தில் இருந்து மனைவி, குழந்தை மற்றும்  நண்பர்கள் என மொத்தம் ஒன்பது பேருடன் தனி சொகுசு விமானம் மூலம் புறப்பட்டிருக்கிறார். அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லெண்டோ நகருக்கு இந்த பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள்.  

f5

 விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கோளாறு ஏற்பட்டிருக்கிறது . இதனால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டிருக்கிறது.  அதே விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கும்போது விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடு தளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது.

f1

 இந்த விபத்தில் விமானம் முழுவதும் தீப்பற்றி எரிந்து இருக்கிறது.   இதில்  இசையமைப்பாளர் பாலோ லா மூவி உட்பட அதில் பயணித்த 9 பேரும் உயிரிழந்துள்ளனர்.