வறுமையை போக்க 9 வயது மகளை 55 வயது முதியவரிடம் விற்ற தந்தை!

 
ttn

கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கிருந்த பல்லாயிரம் மக்கள் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் உதவிகளுடன் நாட்டிலிருந்து வெளியேறினர். அதேசமயம் உலக நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு அளித்துவந்த பொருளாதார உதவிகளை அனைத்தையும் நிறுத்திக் கொண்டனர்.  இதனால் தற்போது ஆப்கானிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது.

Parwana

இந்நிலையில் அன்றாட பிழைப்புக்கு கஷ்டப்படும் மக்கள் உணவின்றி தவித்து வரும் நிலையில் திருமணம் என்ற பெயரில் தங்களின் குழந்தைகளை முதியோர்களுக்கு விற்பனை செய்யும் சம்பவம் கடந்த சில மாதங்களாக அரங்கேறி வருகிறது. வறுமையின் காரணமாக பர்வானா மாலிக் என்ற 9 வயது மகளை,  தந்தை அப்துல் மாலிக்  55 வயது முதியவரிடம் விற்றுள்ளார். அத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 12 வயதான மற்றொரு மகளையும் விற்பனை செய்துள்ளனர். இந்த விவகாரம் பத்திரிகைகளில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

afkhan

கழுத்தை நெரித்த பொருளாதார நெருக்கடி காரணமாக மகளை விற்பனை செய்ததாக தந்தை அப்துல் மாலிக் தெரிவித்துள்ளார்.  பாதிக்கப்பட்ட சிறுமியோ, தான் படிக்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் ஒரு ஆசிரியராக பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.