பயங்கர தீ விபத்து! லண்டன் விமான நிலையம் இரவு வரை மூடல்!

லண்டனில் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வரும் நிலையில், ஹீதோர் சர்வதேச விமான நிலையம் இரவு வரை மூடப்பட்டுள்ளது.
லண்டன் ஹீத்ரோ விமான நிலைத்திற்கு மின்சாரம் வழங்கும் மின் நிலையத்தில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அருகில் வீடுகளில் வசித்த மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலம் சூழ்ந்தது.
இந்த நிலையில், மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதால் இன்று முழுவதும் லண்டன் விமான நிலையத்தில் விமான சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இரவு 11.59 மணி வரை விமானங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இன்று ஒருநாள் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.