இந்தோனேசியா: சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து..!! கடலில் குதித்து பயணிகள் உயிர் தப்பிய அதிர்ச்சிக் காட்சி..

 
இந்தோனேசியாவில் சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து..!! இந்தோனேசியாவில் சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து..!!


இந்தோனேசியாவில் 280 பேருடன் சென்ற சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  

இந்தோனேசியாவில் உள்ள தாலீஸ் தீவில் 280 பேருடன் சென்ற சொகுசு கப்பலில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தலாவுத் தீவில் இருந்து மனாடோ நகருக்கு சென்ற கே.எம்.பார்சிலோனாவுக்கு பயணிகளுடன் சொகுசு கப்பலில் சென்று கொண்டிருந்தது.  அப்போது எதிர்பாராத விதமாக அந்நாட்டு நேரப்படி மதியம் 1.30 மணியளவில் கப்பலில் தீ பற்றிய நிலையில்,  தீ கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது., கப்பலில் தீ பற்றி எரிந்துகொண்டிருந்த  நிலையில், அதில் இருந்த பயணிகள் பலர் அலறியடித்துக்கொண்டு கடலில் குதித்து உயிர் தப்பினர்.  

2 படகுகள் மற்றும் கப்பல் மூலம் கடலில் குதித்த பயணிகளை மீட்கும் பணி நடைபெற்றது.   லைஃப் ஜாக்கெட் அணிந்துகொண்டு கடலில் குதித்து பயணிகள் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில், கடலில் குதித்தவர்களில் பலர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த தீ விபத்தில் சிக்கி 18 பேர் காயமடைந்த நிலையில், இருப்பினும் பலரை காணவில்லை எனக் கூறப்படுகிறது. கப்பலில் ஏற்பட்ட தீ முழுமையாக அணைக்கப்பட்டதாகவும், மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.