முதல் கொரோனா உயிரிழப்பு.. முதன்முறையாக முககவசம் அணிந்த வடகொரிய அதிபர் கிம்..

 
முதல் கொரோனா உயிரிழப்பு.. முதன்முறையாக முககவசம் அணிந்த வடகொரிய அதிபர் கிம்..

வடகொரியாவில் முதன்முறையாக  கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, அங்கு சுமார் 1 லட்சத்து 87 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  

கொரோனா மரணங்கள்
 உலக நாடுகளெல்லாம் கொரோனாவுக்கு அஞ்சி ஊரடங்கு அறிவித்து, வீட்டில் முடங்கிக்கொண்டிருந்த காலத்தில் கூட வடகொரியாவில் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை  என அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது.   அதேபோல் உலகம் முழுவதும்  கொரோனாவைக் கட்டுப்படுத்த,  தடுப்பூசி செலுத்தும்  பணி முடுக்கிவிடப்பட்டிருந்தது. ஆனால் வடகொரியாவில் வாழும் 25 மில்லியன் மக்களில் யாருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படவில்லை என்றும் அந்நாடு கூறி வந்தது.    சீனா, ரஷ்யா மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவற்றின் தடுப்பூசி சலுகைகளை  வடகொரியா நிராகரித்தது.  இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு வடகொரியாவில் முதல் கொரோனா பாதிப்பு நேற்று  பதிவாகியுள்ளது.  

கொரோனா

ஆம், வடகொரியாவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த  6 பேரில் ஒருவருக்கு  ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்,  நாடு முழுவதும்    ஊரடங்கு அறிவித்து உத்தரவிட்டார்.  முதல் முறையாக முககவசம் அணிந்து வந்த அதிபர்,  நமது தேசத்தில் சத்தமில்லாமல் ஒமைக்ரான் நுழைந்துவிட்டது.  இதனால் அவசரநிலை அறிவிக்கப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார். நேற்று ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட அந்த நபர் இன்று உயிரிழந்திருக்கிறார். வடகொரொயாவில் முதல் கொரோனா உயிரிழப்பு பதிவாகியுள்ளதை அடுத்து,  1,87,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது.