பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷ்ரப் காலமானார்!

 
parvesh mushraf

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபரான பர்வேஷ் முஷ்ரப் உடல்நலக்குறைவால் துபாயில் இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 79.
 
1943 சுதந்திரத்திற்கு முன்பு டெல்லியில் பிறந்தவர் பர்வேஸ் முஷ்ரப். தேச பிரிவினையின் போது முஷரப் குடும்பம் பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு இடம்பெயர்ந்தது. பாகிஸ்தானின் ராணுவ தளபதியாக இருந்த முஷாரப், ராணுவ நடவடிக்கை வாயிலாக 1999ல் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றினார். 2009 வரை பாகிஸ்தான் அதிபராக பதவி வகித்து வந்தார். இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கார்கில் போருக்கு முஷாரப் தான் காரணியாக இருந்தார். 

parvesh

2016 முதல் ஐக்கிய அரபு எமீரேட்சின் துபாயில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக துபாயில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் முஷாரப் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று  காலமானார். இவர், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவின் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். அவர் மீது, 2007ல் பாகிஸ்தான் அரசியல் சாசன சட்டத்தை ரத்து செய்த வழக்கும் உள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக, 2016ல் துபாய் சென்றவர், அதன் பின் பாகிஸ்தான் திரும்பவில்லை. இதனிடையே 2019ம் ஆண்டு தேச துரோக வழக்கில் மரண தண்டனை வழங்கி பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.