உலக மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா! - ஐ.நா. தகவல்

 
population

உலக மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

உலக மக்கள் தொகை நிலை-2023 அறிக்கையை ஐ.நா.வின் மக்கள் தொகை நிதியம் இன்று வெளியிட்டது. அதில் உலக மக்கள் தொகை வளர்ச்சி இந்தாண்டு எவ்வாறு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மக்கள் தொகையில் இந்தியா,  சீனாவை பின்னுக்கு தள்ளியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவின் மக்கள் தொகை 142.86 கோடி எனவும்,  சீன மக்கள் தொகை 142.57 கோடியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மூன்றாம் இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் மக்கள் தொகை 34 கோடியாக உள்ளது. 

மக்கள் தொகை கணக்கெடுப்பை இந்தியா கடந்த 2011-ம் ஆண்டு எடுத்த நிலையில், அதன்பிறகு 2021-ல் எடுத்திருக்க வேண்டும். ஆனால் கொரோனா காரணமாக அது தாமதமாகி உள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் உலக மக்கள் தொகை 804.50 கோடியாக இருக்கும். இதில், மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தொகையை இந்தியாவும், சீனாவுமே கொண்டிருக்கும். இருந்த போதிலும், இவ்விரு நாடுகளிலும் மக்கள் தொகை பெருக்க வேகம் தற்போது குறைந்து வருகிறது. கடந்த 60 ஆண்டுகளாக ஆண்டுக்காண்டு உயர்ந்து கொண்டே இருந்த சீன மக்கள் தொகை கடந்த ஆண்டுதான் முதல்முறையாக அதற்கு முந்தைய ஆண்டைவிட குறையத் தொடங்கியது. இனி, இது தொடர்ந்து குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.