ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் உடல் மீட்பு
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஈரான் அதிபர் இப்ராஹின் ரெய்சி பயணித்த ஹெலிகாப்டர் கடும் பனிமூட்டம் காரணமாக ஈரானின் ஜல்பா பகுதியில் மலையில் மோதி விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அஜர்பைஜானில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது இச்சம்பவம் நடந்துள்ளது.

இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இப்ராஹிம் ரைசியுடன் பயணம் செய்த வெளியுறவு அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த அசர்பைஜானை ஒட்டியுள்ள ஜல்பா நகர் மலைப்பகுதியில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஹெலிகாப்டரில் பயணம் செய்த அனைவரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.
#WATCH | Iran President Ebrahim Raisi, Foreign Minister died in a helicopter crash due to heavy fog in mountain terrain; Mortal remains of the deceased being retrieved
— ANI (@ANI) May 20, 2024
(Source: Screenshot from video shared by Iran's Press TV) pic.twitter.com/gTWsmzkkCu

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் அசர்பைஜானை ஒட்டியுள்ள ஜல்பா நகரில் நேற்று விபத்துக்குள்ளானது. முற்றிலும் உருக்குலைந்த நிலையில் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டது.