இலங்கை பிரதமர் ராஜபக்சே குடும்பத்துடன் இந்தியாவில் தஞ்சமா?? - இந்திய தூதரகம் விளக்கம்..

 
இலங்கை பிரதமர் ராஜபக்சே குடும்பத்துடன் இந்தியாவில் தஞ்சமா?? - இந்திய தூதரகம் விளக்கம்..


இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது குடும்பத்தினருடன் இந்தியாவில் தஞ்சமடைந்திருப்பதாக வெளியாகும் செய்தி அடிப்படை ஆதாரமற்றது என இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.  

 ராஜபக்சே குடும்பத்தினரின் தவறான முடிவுகளாலே இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறி, அந்நாட்டு மக்கள் கடந்த ஒரு மாதத்திற்கும்  மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.    அதிபர் கோத்தபய ராஜபக்சவும் , பிரதமர் மகிந்த ராஜபக்சேவும்   பதவி விலகக்கோரி மக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில்   ராஜபக்சே ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து, அங்கு வன்முறை வெடித்தது.. நேற்று முன்தினம் மாலை மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.   அவரது வீடு உள்பட ஆளுங்கட்சியினர் பலரது வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.  இலங்கையே கலவர பூமியாக காட்சியளிக்கிறது.

இலங்கை பிரதமர் ராஜபக்சே குடும்பத்துடன் இந்தியாவில் தஞ்சமா?? - இந்திய தூதரகம் விளக்கம்..

இந்நிலையில் உயிருக்கு பயந்து  மகிந்த ராஜபக்சே குடும்பத்தினருடன் திரிகோண மலையில் உள்ள கடற்படை தளபதி வீட்டில் தஞ்சம் அடைந்தார்.  போராட்டக்காரர்கள் அங்கும் குவிந்ததால், இலங்கை தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவுகிறது.     ராஜபக்சே குடும்பத்தினர் வெளிநாடு தப்பிச் செல்ல  திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் என  மகிந்த ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே தெரிவித்திருக்கிறார்.

இலங்கை பிரதமர் ராஜபக்சே குடும்பத்துடன் இந்தியாவில் தஞ்சமா?? - இந்திய தூதரகம் விளக்கம்..

இந்தச் சூழலில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது குடும்பத்தினருடன் இந்தியாவில் தஞ்சமடைந்திருப்பதாக சமூக வலைதளங்களிலும், சில இலங்கை ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியன.  இந்நிலையில் இடனை மறுத்துள்ள இந்திய தூதரகம், இது முற்றிலும் தவறான செய்தி என்றும், அடிப்படை ஆதாரமற்றது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இதனை யாரும் நம்ப வேண்டாம் என்றும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.