ஓமைக்ரன் எதிரொலி - ஜப்பானில் வெளிநாட்டு பயணிகளுக்குத் தடை

 
Fumio Kishida

ஓமைக்ரான் வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக, பல்வேறு நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகள், தங்கள் நாட்டுக்குள் நுழைய ஜப்பான் தடை விதித்துள்ளது.

corona virus

இரண்டாம் அலையின் தாக்கத்திலிருந்து மீண்டு வந்திருக்கும் ஜப்பான், இந்த மாத தொடக்கத்தில் தான் வெளிநாட்டு வணிகர்கள் , மாணவர்கள் வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் மற்ற அனைத்து குடியுரிமையாளர்களையும் தங்கள் நாட்டுக்கு வர அனுமதி அளித்திருந்தது.

அதற்குள்ளாக, ஓமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதையடுத்து மீண்டும் எல்லைப் போக்குவரத்தை மூடுவதாக அறிவித்துள்ளது. இந்த தடை உத்தரவு குறித்து இன்று அறிவித்துள்ள அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா, நாளை(செவ்வாய் கிழமை ) முதல் உத்தரவு அமலுக்கு வருவதாக தெரிவித்திருக்கிறார்.

japan

தென் ஆப்ரிக்கா மற்றும் ஸிம்பாவே, ஸாம்பியா உள்ளிட்ட  8 அண்டை நாடுகளில்  வரும் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும், 10 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும் எனவும் அறிவித்திருக்கிறது.