மைக்ரோசாஃப்ட் மென்பொருள் செயலிழந்தது- உலகளவில் வங்கி, விமான சேவையில் பாதிப்பு
மைக்ரோசாஃப்ட் மென்பொருள் செயலிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகளவில் வங்கி, விமான சேவையில் பாதிக்கப்பட்டுள்ளன.

மைக்ரோசாஃப்ட் இயங்குதளம், செயலி உள்ளிட்ட சேவைகள் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சர்வதேச அளவில் வங்கி, விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகளவில் பொருளாதாரம், தொலை தொடர்பு உள்ளிட்ட சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மைக்ரோசாப்ட் 365, Xbix,Outlook உள்ளிட்டவை செயல்படாததால் உலகம் முழுவதும் ஆயிரகணக்கானவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக அமெரிக்காவில் விமான சேவைகள் முடங்கியுள்ளன. இந்தியாவிலும் இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட விமானங்களின் புறப்பாடு பாதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் சேவைகளில் சிக்கல் ஏற்பட்டதால் விமான நிறுவனங்கள் மேனுவல் முறையை பின்பற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் மைக்ரோசாஃப்ட் சாப்ட்வேரில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.பயனாளர்கள் பலரது சிஸ்டம்களில் ப்ளூ ஸ்கிரீன் தோன்றியது. சிக்கலை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், படிப்படியாக இயல்பு நிலை திரும்பும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


