விண்வெளி பயணத்திற்கு நாள் குறித்த நாசா..!! இந்திய விண்வெளி வீரர் 4பேர் பயணம்..

 
Subanshu Shukla - Axiom 4 Subanshu Shukla - Axiom 4


இந்திய விண்வெளி வீரர்  சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் நாளை, சர்வதேச  விண்வெளி நிலையத்திற்கு பயணம் மேற்கொள்கின்றனர்.  

இஸ்ரோ,  நாசா,  ஆக்ஸியம் ஸ்பேஸ் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் ‘அக்ஸியம் - 4’ திட்டத்தை முன்னெடுத்துள்ளது.  இதில்  இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா,  முன்னாள் நாசா வீரர் பெக்கி விட்சன்,  ஹங்கேரி வீரர்  திபோர் கபு, போலன்ந்து வீரர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கீ  ஆகிய நான்கு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.  

Subanshu Shukla - Axiom 4

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவிலுள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘ஃபால்கான் 9’ ராக்கெட் மூலம் ஏவப்பட இருந்தது. இந்தப் பயணம் ஜூன்19  தேதி புறப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ‘ஃபால்கன் 9’ராக்கெட்டில் திரவ ஆக்ஸிஜன் கசிவு பிரச்சனையால் விண்வெளி பயணம் பின்னர் ஜூன் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.  ஆனால் அன்றைய தினமும் விண்வெளிப் பயண திட்டம் கைகூடவில்லை.  திட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Image

முன்னதாக  மே 29, ஜூன் 8 ,10, 11 , 19 மற்றும் ஜூன் 22 தேதிகளில் என ‘ஆக்ஸியம் - 4’ திட்டம் 6 முறை ஒத்திவைக்கப்பட்டது.  மோசமான வானிலை மற்றும் ஆக்ஸிஜன் கசிவு காரணமாக இந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டதாகவும், விரைவில் அடுத்த தேதி அறிவிக்கப்படும் என்றும் சர்வதேச விண்வெளி மையம் அறிவித்திருந்தது. அதன்படி இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் ‘ஆக்ஸியம் - 4’ திட்டத்தின் கீழ் நாளை சர்வதே விண்வெளி மையத்திற்கு பயணம் மேற்கொள்கின்றனர். இவர்கள் 14 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வு மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.