நேபாள விமான விபத்து: பயணித்த 19 பேரும் உயிரிழப்பு..
நேபாளத்தில் விமானம் ரன்வேயில் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
நேபாளம் தலைநகர் காட்மண்டு அருகே 19 பேருடன் சென்ற பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது. காட்மண்டு திரிபுவன் சந்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 19 பயணிகளுடம் சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டுச் சென்றிருக்கிறது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஓடுதளத்தில் சென்றுகொண்டிருந்த போதே, திடீரென கட்டுப்பாட்டை இழந்து அதன் ஓடுபாதையிலிருந்து சறுக்கி விபத்துக்குள்ளானது. கீழே விழுந்த விமானம் திப்பற்றி எரியத் தொடங்கியதால் அங்கு பரபரப்பான சூழல் காணப்படுகிறது.

பொக்காரா என்கிற ரிசார்ட் நகருக்கு புறப்பட்ட போது இந்த விபத்து நேர்ந்திருக்கிறது. ஓடுதளத்தில் இருந்து வேகமாக மேலே எழ முயன்றதால் விபத்து நேர்ந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் கீழே விழுந்த உடனேயே விமானம் தீப்பற்றி எரியத் தொடங்கியதால் அதில் பயணித்த 19 பேரின் நிலை என்ன என்பது தெரியாமல் இருந்து. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் துரிதமாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் முதல்கட்டமாக 5 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், தற்போது 19 பேர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கீழே விழுந்த விமானம் முற்றிலுமாக எரிந்து சாம்பலான காட்சிகளும் வெளியாகி பதைதைக்க வைக்கிறது.
Another plane crash incident in Nepal, Katmandu, 18 died instantly 🥹#NepalPlaneCrash #Kathmandu #Nepalpic.twitter.com/sKGbM69nhE
— Shyam (@ShyamsundarGHS) July 24, 2024


