அமைதிக்கான நோபல் பரிசு, நர்கீஸ் முகமதிக்கு அறிவிப்பு

 
tn

இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், அமைதி ஆகிய பிரிவுகளுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஒப்பற்ற ஆய்வுகளை மேற்கொண்டவர்களுக்கும் மனிதகுலத்திற்கு பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள், கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் வழங்கப்படும் பரிசாக இது இருக்கிறது. இப்பரிசைப் பெறுபவர்கள் பெருமதிப்பு கொண்டவர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். நோபல் பரிசு சர்வதேச அளவில் பெரிதும் போற்றத்தக்க மதிக்கப்படும் பரிசாகும்.நோபல் பரிசு ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு அடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

tn

இந்நிலையில்  2023ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, ஈரான் நாட்டை சேர்ந்த நர்கீஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடி பல முறை சிறை சென்றுள்ள நர்கீஸ் முகமதி, தற்போதும் சிறையில்தான் உள்ளார். 

tn

முன்னதாக  2023ம் ஆண்டின் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த பியரி அகோஸ்தினி, ஃபெரங்க் க்ரவுஸ், ஆனி ஹூலியர் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு  அறிவிக்கப்பட்டுள்ளது.