ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்தார் பிரதமர் மோடி

 
PM  MOdi

பிரான்ஸ் பயணத்தை முடித்த பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரான்ஸ் நாட்டின் தேசிய தினத்திற்கு வருமாறு அந்நாட்டி அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார். அவரின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் பிரான்ஸ் புறப்பட்டு சென்றார். அந்நாட்டின் தலைநகர் பாரீஸ் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் பிரதமர் எலிசபெத் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதை வழங்கி பிரதமர் மோடியை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கவுரவித்தார். பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான "The Grand Cross of the Legion" விருதை பிரதமருக்கு வழங்கி கவுரவித்தார் இம்மானுவேல் மேக்ரான். இதனை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டில் தேசிய தின விழாவில், பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.  

modi

பிரான்ஸ் பயணத்தை முடித்த பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டு சென்றார். இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்த பிதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது அபுதாபி விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் வரவேற்றார். இந்த பயணத்தின் போது இருநாட்டு உறவு, வர்த்தகம், பாதுகாப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.