பெரும் துயரம்! போப் ஆண்டவர் காலமானார்!
உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் ஆண்டவர் இன்று காலமானார்.
உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் ஆண்டவர் உடல்நிலை கடந்த சில நாட்களாக கவலைக்கிடமாக இருந்தது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் போப் ஆண்டவரின் உடல்நிலை மோசம் அடைந்தது. சுவாசக்கோளாறு காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் 14 ம் தேதி முதல் போப் ஆண்டவர் வாடிகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். போப் ஆண்டவருக்கு நுரையீரலில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் ஆண்டவர் காலமானார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் போப் ஆண்டவரின் உடல்நிலை பின்னடைவை அடைந்தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். போப் ஆண்டவர் மறைவு காரணமாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். உலக தலைவர்கள் பலரும் போப் ஆண்டவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


