அர்ஜென்டினாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; மக்கள் பீதி

 
நிலநடுக்கம்

அமெரிக்காவின் அலாஸ்கா தீவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று அர்ஜென்டினாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

அர்ஜெண்டினாவில்  6.6 என்கிற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த திடீர் நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் வீடுகளில் இருந்த மக்கள் வீதியில் சாலைகளின் தஞ்சம் அடைந்தனர். அர்ஜென்டினாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம அண்டை நாடான சிலியிலும் உணரப்பட்டுள்ளது.

 நிலநடுக்கம்

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தற்போது வரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. பெரிதாக சேதம் ஏற்பட்டதாகவும் தகவல் இல்லை. இந்த நிலநடுக்கம் 171 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. நேற்று அமெரிக்காவின் அலாஸ்கா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதுடன், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது அர்ஜென்டினாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பது மக்களை பீதியடைய செய்துள்ளது