ரஷியாவில் உள்நாட்டு கிளர்ச்சி உருவானால் தோல்வியில் தான் முடியும் - புதின்

 
putin

ரஷியாவில் உள்நாட்டு கிளர்ச்சி உருவானால் தோல்வியில் தான் முடியும் என அந்நாட்டின் அதிபர் புதின் கூறியுள்ளார். 

நேட்டோ படையில் உக்ரைன் சேர முயற்சி செய்த நிலையில், இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தனர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போரானது சுமார் ஒன்றரை ஆண்டுகளை தாண்டியும் ஓய்ந்தபாடில்லை. இருநாட்டு போரால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், இதனால் உலக பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ள ரஷியா, உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றி உள்ளது.  ரஷிய ராணுவத்தின் கூலிப்படை அமைப்பான வாக்னர் குழுவும் களத்தில் இறங்கி உக்ரைன் படைகளை கடுமையாக தாக்கின. இந்த இரண்டு தரப்பினரையும் உக்ரைன் படைகள் எதிர்கொண்டு வந்தன. இந்நிலையில் ரஷிய ராணுவத்தின் கூலிப்படை அமைப்பான வாக்னர் குழு, ரஷிய ராணுவத்திற்கு எதிராக திரும்பியதால் பெரும் பதற்றம் உருவானது. ஆனால் அந்த படையின் கிளர்ச்சி 24 மணி நேரத்தில் முடிவுக்கு வந்துவிட்டது. இருப்பினும் ரஷ்யாவில் உள்நாட்டு போர் வெடிக்கும் சூழல் உருவானது. 

Russia

இதுகுறித்து ரஷிய அதிபர் புதின் கூறியதாவது:- ரஷியாவில் உள்நாட்டு கிளர்ச்சி உருவானால் தோல்வியில் தான் முடியும். ரஷிய ராணுவ வீரர்கள் ஒருவரை ஒருவர் கொல்ல வேண்டும் என மேற்கு நாடுகள் விரும்புகின்றன. வாக்னர் படையை வீழ்த்த உறுதுணையாக இருந்த ரஷ்ய மக்களுக்கு நன்றி. வாக்னர் படை ரஷிய ராணுவத்தில் இணையலாம் அல்லது பெலாரஸ் நாட்டிற்கு செல்லலாம்.  ரஷியாவில் ரத்தம் சிந்துவதை தவிர்க்க இறங்கிய வாக்னர் கூலிப்படை போராளிகள் மற்றும் தளபதிகளுக்கு நன்றி. வாக்னர் போராளிகள் விரும்பினால் பெலாரஸுக்கு இடம்பெயர அனுமதிப்பதாகவோ அல்லது பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவோ அல்லது அவர்களது குடும்பங்களுக்குத் திரும்பவோ அனுமதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.