துருக்கியில் மீட்பு பணிகள் நிறைவு - இதுவரை 40,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

 
Turkey

துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக அந்நாட்டிற்கு சென்றிருந்த இந்தியாவை சேர்ந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இந்தியா திரும்பினர். 

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6ம் தேதி  ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் அந்நாடுகள்  உருகுலைந்துபோய் , கட்டிடக்குவியல்களாக காட்சியளிக்கின்றன. சின்னபினமாகக் கிடக்கும் கட்டிட இடிபாடிகளில் இருந்து  சடலங்களை மீட்டெடுக்கும் பணி 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்றது.   அதிர்ஷ்டவசமாக இடிபாடுகளில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் சிலர் உயிருடன் மீட்கப்பட்டனர். இரு நாடுகளிலும்  நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை கடந்து இருப்பதாகவும்,   20 லட்சம் பேர் புலம் பெயர்ந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்தியா உள்ளிட்ட பல்வேரு நாடுகளில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் படை, நிவாரண உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டன.

Turkey


 
இந்நிலையில், துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட் பிறகு 2 வார காலமாக தீவிர நடைபெற்று வந்த மீட்பு பணிகள் நேற்று மாலையுடன் நிறைவடந்தன. துருக்கியில் இதுவரை நிலநடுக்கத்துக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40,642 ஆக அதிகரித்துள்ளதாக அந்த நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. அதேபோல் சிரியாவில் பலி எண்ணிக்கை 5,800 ஐ கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.