"மரண தண்டனையை நிறுத்த ரூ.34 கோடி" - பொதுநிதி திரட்டிய மக்கள்!!

 
tnt

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபரை காப்பாற்ற பொதுமக்கள் ரூ. 34 கோடி வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

tn

 கேரள மாநிலம் கோழிகோட்டை சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தனது பராமரிப்பில் இருந்த நாட்டு சிறுவனை கொலை செய்த குற்றத்திற்காக கடந்த 18 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்துள்ளார். மாற்றுத்திறனாளியான சிறுவனின் மரணத்திற்கு எதிர்பாராத விதமாக ரஹீம் காரணமாகிவிட்டதாக கூறப்படுகிறது.  சிறுவனின் குடும்பத்தினர் ரஹீமை மன்னிக்க முன்வராத காரணத்தினால் கடந்த 2018 ஆம் ஆண்டில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது .

t

 மேல்முறையீடுகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் மரண தண்டனையானது உறுதியானது. இதனிடையே ரஹீமை மன்னிக்க ஒப்புக்கொண்டது. ஆனால்  நிபந்தனை ஒன்றையும் விதித்தது.  தங்களுக்கு இழப்பீடாக ஏப்ரல் 18ஆம் தேதிக்குள் 15 மில்லியன் சவுதி ரியால் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 34 கோடி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. இதனால்  ரஹீமை காப்பாற்றும் நடவடிக்கையில் இறங்கிய ஒரு குழுவினர் பல்வேறு அமைப்புகளின் உதவியுடன் இணைய வழியில் பொது நிதியை திரட்டினர்.  இந்த முயற்சியில் ஆயிரக்கணக்கான மக்களிடம் இருந்து பணம் பெறப்பட்டன.  ஆரம்பத்தில்  சொற்ப நிதியே  திரட்டப்பட்ட நிலையில் கடந்த நான்கு நாட்களில் மிகப்பெரிய அளவில் நிதி திரட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதன் மூலம் ரஹீமை காப்பாற்ற தேவையான ரூபாய் 34 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது.  இந்த சம்பவத்தை குறிப்பிட்டு இதுதான் கேரளத்தின் உண்மையான கதை ;  மனிதாபிமானமிக்க நோக்கத்துக்காக கைகோர்த்த அனைவருக்கும் நன்றி என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்துள்ளார்.