அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு

 
அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பரப்புரை மேற்கொண்டிருந்த போது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை  பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்றனர். 

Image

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், அவருக்கு லேசாக காதில் காயம் ஏற்பட்டது. உடனே அவரது ஆதரவாளர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ட்ரம்ப்  சிகிச்சைக்குப் பின் நலமாக உள்ளார். ட்ரம்ப் பரப்புரையில் கலந்துகொண்ட ஒருவரே அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.



அமெரிக்கா அனைத்து துறைகளிலும் சாதனையாளர்களை உருவாக்கும் நாடு. ஆனால் அந்நாட்டு அதிபர் தேர்தல் போட்டியாளர்களில் விவாதத்தின்போதே தூங்கிவிடும் 
81 வயது ஜோ பைடனையும், பாலியல் குற்றச்சாட்டுகளில் அபராதம் விதிக்கப்பட்ட 79 வயது ட்ரம்ப் பையும் விட்டால் செயல் ஊக்கமுள்ள தலைவர்கள் அங்கு இல்லை என்பது 
வினோதமான உண்மை. வரும் அதிபர் தேர்தலில் இந்த சம்பவத்தைக் காட்டியே சிம்பத்தி ஓட்டு வாங்கி ட்ரம்ப் ஜெயித்துவிடுவார் என்கிறார்கள் அந்நாட்டு அரசியல் வல்லுநர்கள்.