இலங்கை அதிபர் தேர்தலில் திடீர் டிவிஸ்ட்- வரலாற்றில் முதல் முறையாக 2ம் வாக்கு எண்ணிக்கை
இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக 2ம் கட்ட வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது.
இலங்கை அதிபர் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் 2ஆம் விருப்ப வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற வேண்டும், அனுர குமார திசநாயகே மற்றும் சஜித் பிரேமதாசா தவிர மற்ற வேட்பாளர்கள் நீக்கம் செய்யபட்டுள்ளன.
முதல் வாக்கு எண்ணிக்கையில் எந்த வேட்பாளரும் 50% வாக்குகளை பெறவில்லை. இதனால், வாக்காளர்கள் வாக்குச்சீட்டில் இரண்டாவது விருப்பமாக தேர்வு செய்த எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது. முதல் எண்ணிக்கையில் முதலிடம் பிடித்த அநுர திசநாயக்க மற்றும் சஜித் பிரேமதாசாவுக்கு விழுந்த வாக்குகள் மட்டுமே 2வது எண்ணிக்கையில் கணக்கில் எடுக்கப்படும். இறுதி எண்ணிக்கையில் அதிக வாக்குகளை பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்