சிரியாவுக்கு இந்தியர்கள் உதவ வேண்டும் - சிரிய தூதரகம் கோரிக்கை..

 
துருக்கி


நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிரியாவுக்கு இந்தியர்கள் உதவ வேண்டும் என அந்நாட்டு தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.

நிலநடுக்கத்தால் உருகுலைந்து போயுள்ள துருக்கி மற்றும் சிரியாவில்,  பலி எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியா உட்பட 80 நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளன. பல்வேறு நாடுகளின் ஆதரவுடன் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.  இடிபாடுகளில் சிக்கி பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடுபவர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்தியாவில் இருந்து மட்டும்  6 விமானங்களில் நிவாரணப் பொருட்களும், மருத்துவக் குழுவுடன் அடங்கிய 150 க்கும் மேற்பட்ட மீட்பு படையினரும் அனுப்பப்பட்டுள்ளனர்.   

சிரியாவுக்கு இந்தியர்கள் உதவ வேண்டும் - சிரிய தூதரகம் கோரிக்கை..

இதேபோல் பல்வேறு நாடுகளும் மீட்பு படையினர், நவீன எந்திரங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், மருந்து பொருட்கள் மற்றும் மோப்ப நாய்கள் அடங்கிய வல்லுனர் குழுவையும் அனுப்பி வைத்துள்ளன. அந்தவகையில் 1.10 லட்சத்துக்கு மேற்பட்ட மீட்புப் படையினர் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே  உலக நாடுகள் அனைத்தும் துருக்கியில் மட்டுமே முகாமிட்டுள்ளதாகவும்,  இன்னும் தங்கள் நாட்டில்  பல இடங்களில் மீட்பு பணிகள் தொடங்கப்படவில்லை என்றும் சிரியா குற்றம் சாட்டியுள்ளது.  இதனை அடுத்து மீட்பு பணி மற்றும் நிவாரண பணி விஷயத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று ஐநா சபை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும்,  தேவையின்பொருட்டு நிவாரண பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவுக்கு இந்தியர்கள் உதவ வேண்டும் - சிரிய தூதரகம் கோரிக்கை..

இந்த நிலையில், நிலநடுக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிரிய மக்களுக்கு இந்தியர்கள் உதவ  வேண்டும் என இந்தியாவில் உள்ள சிரியா தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து டெல்லியில் உள்ள சிரியா தூதரகம் , துயரத்தில் இருக்கும் சிரியா மக்களுக்கு உதவிட, மருத்துவ உபரகணங்கள், அவசர மருந்துகள், போர்வைகள், கூடாரங்கள், குளிரை போக்க உதவிடும் துணிகள், உள்ளிட்டவற்றை வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.  மேலும் நிதியுதவி அளிக்க விரும்புபவர்ளுக்காக, வங்கி கணக்கு எண் மற்றும் IFSC code-ஐயும், சிரிய தூதரகம் வெளியிட்டுள்ளது.