"பசுத்தோல் போர்த்திய புலிகள்" - பெண்களை தொடர்ந்து புறக்கணிக்கும் தலிபான்கள்!

 
taliban women

20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ளனர். தலைநகர் காபூலை ஆக்கிரமித்து 3 வாரங்களுக்கு மேல் ஆகிறது. ஆனாலும் இன்னும் அவர்களால் முழுமையான ஆட்சியை அமைக்க முடியவில்லை. பெருந்தலைகளுக்குள் அதிகார மோதல் ஏற்பட்டுள்ளதால் இந்தத் தாமதம் என சொல்லப்படுகிறது. தலிபான்களுக்குள் வெவ்வேறு தனிக்குழுக்கள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் தங்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளன.

இதில் கூட பெண்களுக்கு இடமில்லையா? – தலிபான்களின் அடுத்த பிம்பிளிக்கி பிளாப்பி!

ஆனால் தலிபான்கள் தரப்போ அதனை திட்டவட்டமாக மறுக்கிறது. அதேபோல இதற்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்க இடைக்கால அரசை அறிவித்தது. அதன்படி தலிபான்களின் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட கவுன்சில் தலைவரான முல்லா ஹசன் அகுந்த் இடைக்கால பிரதமராக அறிவிக்கப்பட்டார். இவர் ஐநாவால் அறிவிக்கப்பட்ட சர்வதேச பயங்கரவாதி. இவரைத் தொடர்ந்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்க மூளையாக செயல்பட்ட முல்லா பரதாரும் மவுல்வி ஹவி ஹனாவி ஆகிய இருவரும் துணை பிரதமர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில் கூட பெண்களுக்கு இடமில்லையா? – தலிபான்களின் அடுத்த பிம்பிளிக்கி பிளாப்பி!

இவர்கள் தவிர தலிபான் அமைப்பை உருவாக்கிய முல்லா ஓமரின் மகன் முல்லா யாகூப்புக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் இலாகா ஒதுக்கப்பட்டது. பதவியைப் பிடிக்க பிரச்சினைகள் செய்த ஹக்கானி குழுவின் தலைவர் சிராஜ் ஹக்கானிக்கு அதிகாரமிக்க உள்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டு சரிக்கட்டப்பட்டது. இவர் அமெரிக்காவின் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். மவுல்வி அமீர் கானுக்கு வெளியுறவு விவகாரத் துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி இணை அமைச்சர்களாக சிலரை நியமித்திருந்தது இடைக்கால அரசு.

இதில் கூட பெண்களுக்கு இடமில்லையா? – தலிபான்களின் அடுத்த பிம்பிளிக்கி பிளாப்பி!

அப்பட்டியலில் ஒரு பெண் கூட இணை அமைச்சர்களாகவில்லை. இது பலத்த விமர்சனத்துக்குள்ளானது. ஆட்சியமைப்பதற்கு முன் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என வாக்குறுதிகள் கொடுத்தார்கள். ஆனால் அதைக் காற்றில் பறக்கவிட்டார்கள் என உலக நாடுகளும் ஆப்கானிலுள்ள பெண்கள் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. இதற்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசிய தலிபான் செய்தித்தொடர்பாளர்  ஜபிபுல்லாஹ் முஜாஹித் அமைச்சரவை விரிவாக்கம் இனிவரும் காலங்களில் நடக்கும்போது, பெண்களும் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார்கள் என கூறினார்.

இதில் கூட பெண்களுக்கு இடமில்லையா? – தலிபான்களின் அடுத்த பிம்பிளிக்கி பிளாப்பி!

அடுத்து எப்படியும் பெண்களை அமைச்சராக்குவார்கள் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். இச்சூழலில் மூன்றாம் கட்டமாக 38 இணை அமைச்சர்களும் அவர்களுக்கு உதவியாளர்களாக உயர் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பட்டியலிலும் எந்தப் பெண்ணும் இடம்பெறவில்லை என்பது தலிபான்களின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டியிருப்பதாக பெண்கள் கொந்தளித்துள்ளனர். பிரதமருக்கான இணை அமைச்சர், அமைச்சர்களுக்கு உதவியாளர்கள் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.