#BREAKING துபாயில் தேஜஸ் போர் விமானம் விபத்து

 
ச் ச்

துபாய் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானது. கண்காட்சியில் சாகசத்தின்போது போர் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்த அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி உள்ளன.


 


 

துபாயில் நடைபெறும் விமான கண்காட்சியில்  வானில் வட்டமடித்து சாகசம் செய்து கொண்டிருந்த தேஜஸ் போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானி உயிரிழந்து விட்டதாகவும், இந்த துயரமான நேரத்தில் விமானியின் குடும்பத்திற்கு துணை நிற்போம் என்றும் எக்ஸ் பக்கத்தில் இந்திய விமானப்படை இரங்கல் தெரிவித்துள்ளது. HAL நிறுவன தயாரிப்பான தேஜஸ் போர் விமானம் திடிரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது. துபாயில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2/10 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது. இலகுரக வடிவமைப்பை கொண்ட தேஜஸ் போர் விமானம் மணிக்கு 2,000 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.