"ரிப்பயர் பண்ணவே அவ்ளோ காசா?" - 'டெஸ்லா' காரை டைனமைட் வைத்து தகர்த்த நபர்... ஷாக்கான எலான் மஸ்க்!

 
டெஸ்லா கார்

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். இவர் பல்வேறு துறைகளில் கோலோச்சி வருகிறார். அதில் முக்கியமானது எலக்ட்ரிக் கார்கள். மின்சாரத்தில் இயங்கும் இந்த எலக்ட்ரிக் கார்கள் டெஸ்லா என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகின்றன. புதுமையான கண்டுபிடிப்புகள், பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருந்ததால் வாடிக்கையாளர்களை பெருமளவில் டெஸ்லா கார் ஈர்த்தது. அப்படி நினைத்து வாங்கியவர்களில் ஒருவர் தான் பின்லாந்து நாட்டில் ஜாலா பகுதியை சேர்ந்தவர் டூமாஸ் கேட்டினன். 

Watch: Man explodes his Tesla car with 30 kg dynamite after being told  repairs will amount to Rs. 17 lakh, netizens react

இவர் எட்டு வருடங்களுக்கு முன்பு டெஸ்லாவின் எஸ் மாடல் கார் வாங்கியிருக்கிறார். நன்றாக ஓடிக் கொண்டிருந்த கார் ஒரு மாதத்திற்கு முன்பாக திடீரென பழுதடைந்தது. உடனே காரை சர்வீஸ் சென்டரில் கொண்டு விட்டிருக்கிறார். அவர்கள் தாமதமாகும் என சொன்னதால், கார் ஓனர் வீட்டுக்கு வந்துவிட்டார். சுமார் 1 மாதமாக சர்வீஸ் சென்டரிலிருந்து எந்த அழைப்பும் வரவில்லை என தெரிகிறது. அதற்குப் பின் கேட்டினனை அழைத்து சர்வீஸ் சென்டர் ஊழியர்கள், காரின் பேட்டரி செல்லை மொத்தமாக மாற்ற வேண்டும். அதற்கு 22 ஆயிரத்து 480 யூரோக்கள். அதாவது இந்திய மதிப்பில் 17 லட்சம் ரூபாய்.

இதனால் கடுங்கோபமடைந்த கேட்டினன், காரை 30 கிலோ டைனமைட் வெடி வைத்து தகர்க்க முடிவு செய்தார். இதனையறிந்த யூடியூப் சானல் அவரிடம் பேட்டி கண்டு வெடி வைத்து வெடிக்க செய்தது வரை வீடியோ எடுத்து வைரலாக்கியுள்ளது. எலான் மஸ்க்கின் உருவ பொம்மையை காரின் முன் சீட்டில் வைத்து கேட்டினன் அவரது காரை வெடிக்க வைத்தது தான் ஸ்பெஷல் விஷயமே. இதுதொடர்பாக பேசிய கேட்டினன், "என்னால் 22 ஆயிரம் யூரோ கொடுத்து காரை சரிசெய்ய முடியும். ஆனால் டெஸ்லா கார்கள் குறித்து உலக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இப்படி செய்தேன்” என்றார்.