23 நாடுகளுக்கு பரவிய ஓமைக்ரான் - உலக சுகாதார அமைப்பு தகவல்..

 
omicron variant omicron variant

கடந்த ஓராண்டுக்கும் மேலாக ,  அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸின் தக்கத்திலிருந்து  மீள்வதற்குள்ளாக உலக நாடுகளை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது ஓமைக்ரான்.

WHO

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை ஓமைக்ரான்  வைரஸ் பெரும்பாலான நாடுகளுக்கு பரவத் தொடங்கிவிட்டது. இது வேகமாக பரவக்கூடியது என்றும் உலக அளவில் அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.  ஓமைக்ரான் பரவல் அதிகரிக்காமல் இருக்க  கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் போன்ற  நாடுகள் தங்களது எல்லைகளை மூடி, வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு தடை விதித்துள்ளன. 

ஓமைக்ரான்

இந்தியாவிலும் சர்வதேச விமான போக்குவரத்து சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  12 நாடுகளுக்கு பரவியிருந்த  ஓமைக்ரான் வைரஸ் தற்போது 23 நடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதர அமைப்பு எச்சரித்துள்ளது.

அதாவது 14 நாட்களுக்குள் இங்கிலாந்து, ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் , பிரேசில், வங்கதேசம் , சீனா, மொரீஷியஸ்,  சிங்கப்பூர், பெல்ஜியம்,  கனடா, ஜப்பான், அமெரிக்கா, சவுதி அரேபியா , ஆஸ்திரேலியா மற்றும் லெஸோதோ, மலாவி, நாமிபியா, மொசம்பிக்யூ, ஜிம்பாப்வே உள்ளிட்ட நாடுகளுக்குப் பரவியிருப்பதாக தெரிவித்துள்ளது.