முடிவுக்கு வந்த போர்.. தடாலென பல்டியடித்த ஈரான்..!! ட்ரம்ப் சொன்ன மாதிரியே ஆகிப்போச்சு..
இஸ்ரேல் உடனான போரை நிறுத்துவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரானின் அணு ஆயுதத் திட்டங்கள் அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி அந்நாட்டின் அணு ஆயுத தளங்கள், ராணுவ நிலைகள் மற்றும் எண்ணெய் கிடங்குகள் மீது ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்கிற பெயரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் தரப்பிலும் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டது. தொடக்கத்திலிருந்தே இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்துவரும் அமெரிக்கா, கடந்த ஞாயிறு அன்று ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தியிருக்கிறது. ஈரானில் ஃபார்டவுவ் , நடான்ஸ் மற்றும் இஸ்பாஹான் ஆகிய மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியியது ஒட்டுமொத்த உலகையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.
ஈரான் அமைதி பாதைக்கு திரும்பாவிட்டால் பெரும் அழிவை சந்திக்க நேரிடும் என்றும் அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்கா மத்தியஸ்தம் செய்து போரை முடிவுக்கு கொண்டு வரும் என எதிர்பார்த்தால், தனது படைகளை இறக்கி தாக்குதல் நடத்து அங்கு சூழலையே தலைகீழாக மாற்றி வைத்துவிட்டது. ஈரான் அணு ஆராய்ச்சி மையம் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்காவின் நடவடிக்கையை வரவேற்கிறேன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் தெரிவித்தார்.

அமெரிக்காவின் தாக்குதல் மோசனமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் அறிவித்திருந்தது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிப்பது போல், சீனா,ரஷ்யா, ஏமன் உள்ளிட்ட நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் போர்பதற்றம் அதிகரித்தது.
இந்த நிலையில், கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அமெரிக்காவின் மத்திய கட்டளை மையமாக செயல்பட்டுவரும் அல்-உதெய்த் தளம் மீது நேற்று இரவு ஈரான் அதிரடி தாக்குதலை நடத்தியது. இது மேற்கு ஆசியாவிலேயே அமெரிக்காவின் மிகப் பெரிய கட்டளை தளமாக இருந்து வருகிறது. இங்கு சுமார் 10,000 அமெரிக்க வீரர்கள் பணியாற்றி வருகிறார்கள். மேலும் இங்கு சுமார் 100 அமெரிக்க போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் அமெரிக்காவின் மத்திய கமெண்ட் மையமும், கத்தார் ஏர்வேஸ்ஸின் தலைமையகமும் இங்கு தான் அமைந்துள்ளன. மொத்தமாக ஏவப்பட்ட ஏவுகணைகளில் 6 ஏவுகணைகள் அல்-உதெய்த் தளம் மீது தாக்கப்பட்டதாகவும், 19 ஏவுகணைகளை இடைமறித்து கத்தார் அழித்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை ஏனக் கூறப்பட்டது.
இதனைடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலும் ஈரானும் ஒரே நேரத்தில் தன்னிடம் சமாதானம் பேசியதாகவும், போரை நிறுத்த இதுவே சரியான தருணம் என்றும் கூறி, போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்தார். இதன் மூலம் உலகமும், மத்திய கிழக்கு நாடுகளும் பயனடைவதாக குறிப்பிட்ட அவர், இரு நாடுகளும் எதிர்காலத்தில் அன்பு, அமைதி மற்றும் செழிப்புடன் திகழ்வார்கள் என்று நம்புவதாக அறிவித்தார். ஆனால் டிரம்ப் சொல்வது பொய்.. போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஈரான் தெரிவித்தது. அதோடு தொடர்ந்து இஸ்ரேல் மீது இன்று காலை முதல் மீண்டும் ஏவுகணைகளை வீசி தாக்குதல்களை நடத்தி வந்தது.
இந்தச் சூழலில் இஸ்ரேல் உடனான போரை நிறுத்துவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம் 12 நாட்களாக நீடித்த இஸ்ரேல் - ஈரான் போர் முடிவுக்கு வந்தது. இருநாடுகளுக்கும் இடையேயான போர் நிறுத்தம் 12 நாட்களுக்குள் அமலுக்கு வரும் என ஒப்புக் கொள்ளப்பட்டதாகவும், அதன்படி தற்போது போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.


