'எக்ஸ்' வலைத்தளம் முடங்கியது!
Dec 21, 2023, 12:10 IST1703140802423
உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரை வாங்கவிருப்பதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தர். பின்னர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிடப்போவதாக அறிவித்தார். அதன்பிறகு ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தை நாடியதால், மீண்டும் நானே வாங்கிக் கொள்கிறேன் என்று கூறினார். இதனையடுத்து கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை முழுவதுமாக கைப்பற்றினார்.

பின்னர் டிவிட்டர் என்ற வார்த்தைக்கு பதிலாக x என்று மாற்றப்பட்டது. x.com என்ற இணைய தள முகவரிக்குள் நுழைந்தால் அது நேரடியாக ட்விட்டருக்கு செல்கிறது. இப்படியாக எக்ஸ் வலைத்தளம் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வருகிறது.



