"ட்ரம்ப்புக்கு அதிகாரமில்லை, அவர் விதித்துள்ள வரிகள் சட்டவிரோதமானவை”- அமெரிக்க கோர்ட்

 
trump trump

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் உலகளாவிய வரி விதிப்பு முறை சட்டவிரோதமானது என அமெரிக்க நீதிமன்றம் கூறியுள்ளது. 

trump

இந்திய பொருட்கள் இறக்குமதி மீது அமெரிக்கா விதித்துள்ள 50% வரி விதிப்பால் கடும் நெருக்கடியையும், பெரும் பாதிப்பினையும் சந்தித்துள்ளது பின்னலாடை தொழில்கள். கிட்டத்தட்ட 3000 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதோடு லட்சக்கணக்கான மக்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் உலகளாவிய வரி விதிப்பு முறை சட்டவிரோதமானது என அமெரிக்க நீதிமன்றம் கூறியுள்ளது. தேசிய அவசர நிலை அறிவிக்கவோ, பிறநாடுகள் மீது வரி விதிக்கவோ ட்ரம்புக்கு அதிகாரம் இல்லை எனக் கருத்துக் கூறியுள்ள அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம், அவசர சட்டங்கள் மூலம் வரி விதித்து ட்ரம்ப் அதிகாரத்தை மீறியதாக கண்டனம் தெரிவித்துள்ளது. வரி விதிப்பு குறித்து நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ’ஒட்டுமொத்த பேரழிவு’ என ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.


முன்னதாக வரி விதிப்பு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "வரி விதிப்பு தான் மீண்டும் அமெரிக்காவை பணக்கார, பலமான மற்றும் சக்திவாய்ந்த நாடாக மாற்றும், சிறந்த `MADE IN அமெரிக்கா' பொருட்களை தயாரிக்க வழிவகுக்கும். வரி விதிப்புகளை தகர்த்தால், அமெரிக்காவுக்கு அது மிகப்பெரிய அழிவை கொண்டு வரும். அமெரிக்க உற்பத்தியாளர்கள், விவசாயிகளுக்கு எதிராக எந்த எதிரி நாடோ, நண்பன் நாடோ செயல்பட்டால், பொறுத்துக்கொள்ள முடியாது” என்றார்.