பேச்சுவார்த்தையின் போது குண்டு மழை...அதிருப்தியில் உக்ரைன் : ரஷ்யாவுக்கு எதிராக மாறிய அண்டைநாடுகள்!!

 
tn

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24ஆம் தேதி முதல் போர் நடவடிக்கை  எடுத்து வரும் நிலையில் இரு தரப்புக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.குறிப்பாக ரஷ்யா உக்ரைன் குடியிருப்புகளில் தாக்குதல் நடத்தியதில் இதுவரை 350 அப்பாவி பொதுமக்கள் இறந்துள்ளதாக உக்ரைன் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் சூழலில் இரு தரப்புக்கும் இடையில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.  உடனடியாக போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை வைத்த நிலையில், இருதரப்பும் பேச்சுவார்த்தை தயாராகி நேற்று பேச்சுவார்த்தை தொடங்கியது.

tn

இந்த அமைதி பேச்சுவார்த்தையின் போது உக்ரைன் தலைநகர் கீவ்வில் மக்கள் சுதந்திரமாக நடமாடலாம் என ரஷ்ய ராணுவம் அறிவித்த நிலையில், ஊரடங்கு நீக்கப்பட்டதால் போர் விமான தாக்குதல் எச்சரிக்கையும் நிறுத்தப்பட்டதாக ரஷ்யா அறிவித்தது. இருப்பினும் பேச்சுவார்த்தையின் போதும் ரஷ்யா உக்ரைன் மீது குண்டுமழை பொழிகிறது என உக்ரைன் நாட்டின் தூதுவர் இகோர் போலிகா குற்றம் சாட்டினார்.இதுவரை ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் உக்ரைன் நாட்டில் இருந்து அகதிகளாக வெளியேற்றப்பட்ட நிலையில் 16 குழந்தைகள் உள்ளிட்ட 350 பேர் ரஷ்யாவின் தாக்குதலால் பலியாகியுள்ளனர். அதே சமயம் 5000க்கும் அதிகமான ரஷ்ய வீரர்களும் இந்த போரில் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். ரஷ்ய - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர , மூன்று மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் தோல்வியே மிஞ்சியது. உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய ராணுவ பட்டாளம் உக்ரைன் மீது குண்டு  தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன, நேற்று அரங்கேறிய பேச்சுவார்த்தையின் போது தனது அரசாங்கத்தை விட்டுக்கொடுக்க வற்புறுத்துவதற்கான முயற்சி நடந்தது என்று கூறியுள்ளார் 

tn

இதனிடையே ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு எதிராகவும், உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும் பல்வேறு அண்டை நாடுகள்  நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. அதில், நேஷனல் ஹாக்கி லீக் ரஷ்யாவில் அனைத்து வணிக நடவடிக்கைகளையும் நிறுத்தி உள்ளது.  உக்ரைன் மீது ரஷ்ய படையெடுப்பு காரணமாக எதிர்காலத்தில் அங்கு நிகழ்வுகளை நடத்துவதற்கான வாய்ப்பையும்  நிராகரித்துள்ளது. இதற்கு ரஷ்ய  தெரிவித்துள்ளது.

ஜெலன்ஸ்கி

மென்லோ பார்க், கலிஃபோர்னியாவை தளமாகக் கொண்ட Meta ,  ரஷ்ய அரசு ஊடகங்களில் இருந்து விளம்பரங்களைத் தடை செய்வதாகவும், ரஷ்ய அரசு சார்பாக கருத்துக்களை வெளியிட்ட  40 போலி கணக்குகளை அகற்றியதாகவும் அறிவித்துள்ளது. கனடா உக்ரைனுக்கு ஆயுதங்கள்,  மேம்படுத்தப்பட்ட வெடிமருந்துகளை வழங்கியுள்ள நிலையில்,  ரஷ்யாவிலிருந்து அனைத்து கச்சா எண்ணெய் இறக்குமதியையும் தடை செய்துள்ளது. அதேபோல் ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள 12 ரஷ்ய தூதர்களை வெளியேற்றுவதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

putin

ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைன் மீதான நாட்டின் படையெடுப்பிற்கு பதிலடி கொடுக்கும்  வகையில் தன்னலக்குழுக்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் எரிசக்தி காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றிக்கு பொருளாதாரத் தடை விதித்துள்ளது, இதில் 680 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பல்வேறு நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம்  உக்ரைனுக்கு பிற நாடுகள் வழங்கும் தடவாளங்கள் , ஆயுதங்கள் ரஷ்ய படைகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட நாடுகளே பொறுப்பு என்று ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.