மோதலை தவிர்க்குமாறு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை!
May 10, 2025, 12:34 IST1746860656353
இந்தியாவுடனான போர் பதற்றத்தை தணிக்க வேண்டும் என பாகிஸ்தான் அரசுக்கு அமெரிக்க அறிவுரை வழங்கியுள்ளது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைப் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், போர் பதற்றத்தை தணிக்க வழிமுறைகளை கண்டறியும்படி பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை வழங்கியுள்ளது. மோதலை தவிர்க்க ஆக்கப்பூர்வ பேச்சுக்களை இரு நாடுகளும் மேற்கொள்ள வேண்டும் எனவும், பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கான உதவிகளை செய்ய அமெரிக்கா தயார்
எனவும், பாகிஸ்தான் ராணுவத் தளபதியுடன் அமெரிக்க வெளியுறவு செயலர் மார்கோ ரூபியோ பேசியுள்ளார்.


