உலகளாவிய வரிகளை அமெரிக்க உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு

 
ச்

டொனால்ட் டிரம்ப் விதித்த உலகளாவிய வரிகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு வரி விதிக்கும் அதிகாரம் இல்லை. டிரம்பின் பெரும்பாலான வரிவிதிப்புகள் செல்லாது என அமெரிக்க உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு கூறியுள்ளது. மேலும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு டிரம்ப் விதித்த கூடுதல் வரிகளுக்கு தடை விதித்தது அமெரிக்க நீதிமன்றம். டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானது, எமர்ஜென்சியை பயன்படுத்தி வரிகளை விதிப்பதற்கு அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அதிகாரம் கிடையாது என அமெரிக்க உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தை மீறி சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி கூடுதல் வரியை விதித்து இருந்தார் ட்ரம்ப்.

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் 50 சதவீதம் வரி விதித்தார்.இந்தியாவின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் பெருமையாகத் தமிழ்நாடு எப்போதும் இருந்து வருகிறது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் நமது மாநிலம் கிட்டத்தட்ட 10% அளவிற்குப் பங்களிக்கிறது. இது நாட்டின் மிகப் பெரிய ஏற்றுமதி அளவுகளில் ஒன்றாகும். ஜவுளி, ஆடை, தோல் மற்றும் காலணிகள், ஆட்டோமொபைல்கள், ஆட்டோ உதிரி பாகங்கள், இயந்திரங்கள், ரசாயனங்கள், மின்னணுப் பொருட்கள், கடல் உணவு வகைகள், நகைகள் உள்ளிட்டவை வரை தமிழ்நாட்டின் தொழில்கள், லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதோடு, இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றுகின்றன. இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்காவின் 50 சதவீதம் என்ற புதிய வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்துள்ளதால் தமிழக ஏற்றுமதியாளர்கள், தாங்கள் மேற்கொண்டு வரும் ஏற்றுமதித் தொழிலைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அமெரிக்காவின் 50 சதவீத வரியால், இந்தியாவின் ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் பெரும் அச்சத்தில் சிக்கின. உற்பத்தி, மென்பொருள் துறைகளில் முன்னணியில் உள்ள தமிழகம், அமெரிக்காவை தன் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக கொண்டுள்ளது. கடந்த நிதியாண்டில், தமிழகத்தின் ஏற்றுமதியில், 31 சதவீதம் அமெரிக்காவிற்கே சென்றது. இதனால், 50 சதவீத வரி விதிப்பு, தமிழகத்தை அதிகம் பாதிப்பை சந்தித்தது குறிப்பிடதக்கது.