இன்னும் 2 வாரங்களே... ஒமைக்ரான் வேகமாக பரவும் - அலட்ர் செய்யும் WHO!

 
ஒமைக்ரான்

புதிதாக உருமாறியிருக்கும் ஒமைக்ரான் வைரஸ் குறித்து இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன. உலக சுகாதார அமைப்போ மிகவும் கவலையளிக்க கூடிய வைரஸாக (Variant Of Concern) வகைப்படுத்தியுள்ளது. ஒமைக்ரான் வைரஸ் அபாயகரமான டெல்டா கொரோனாவை விட ஆபத்தான வைரஸ் எனவும் கூறியுள்ளது. அதேபோல டெல்டாவை விட 5 மடங்கு அதிவேகமாக பரவக் கூடியது என்பதால் கூடுதல் ஜாக்கிரதையாக இருக்குமாறு உலக நாடுகளுக்கு வலியுறுத்தியுள்ளது.

WHO says vaccination, not travel curbs, key to battling Omicron | World  News,The Indian Express

இது ஒருபுறம் இருந்தாலும் தென்னாப்பிரிக்காவில் இதனை முதன்முதலில் கண்டறிந்து உலகுக்குச் சொன்ன மருத்துவர் ஏஞ்சலிக் கோட்ஸி ஒமைக்ரானுக்கு அவ்வளவு சீனே இல்லை என்கிறார். கள நிலவரமே வேறு. வேண்டுமென்றே ஊதி பெரிதாக்குகிறார்கள். டெல்டா கொரோனாவை விட வேகமாகப் பரவினாலும் பெரிதாக பாதிப்பு ஏற்படுத்துவதில்லை என அவர் சொல்கிறார். ஒமைக்ரான் பாதிப்பை அருகிலிருந்து பார்த்து வருகிறோம்; ஆனால் உலக நாடுகள் தேவையில்லாமல் அஞ்சுகின்றன என்றார். உலக நாடுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

Omicron variant detected in more countries as scientists race to find  answers | Dhaka Tribune

இருப்பினும் இதுவரை 38 நாடுகளுக்குப் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக தென்னாப்பிரிக்காவில் பரவல் அதிகமாகியுள்ளதாகவும், இன்னும் இரண்டு வாரங்களில் உலகளவில் ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை உயரும் எனவும் கூறியுள்ளது. ஒமைக்ரான் தன்மை குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும், முழுமையான ஆய்வுக்குப் பிறகே எதையும் தீர்க்கமாக சொல்ல முடியும் என்றும் தெரிவித்துள்ளது. ஆரம்ப நிலை ஆய்வின்படி வேகமாகனது மற்றும் தடுப்பூசியை மீறி பரவக் கூடியது என தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.