ஹெவி டிராபிக்; பிரசவ வலியில் துடித்த மனைவி... கைகொடுத்த டெஸ்லா கார் - உலகின் முதல் "டெஸ்லா பேபி"!

 
டெஸ்லா கார்

தொழில்நுட்பம் வளர வளர மக்களின் வேலைப்பளு குறைந்து வருகிறது.  மனிதகுலத்திற்குக் கிடைத்த வரப்பிரசாதம் தான் தொழில்நுட்பம். மக்களின் அன்றாட வாழ்க்கையோடு வாழ்க்கையாக இயைந்துவிட்டது. அந்த வகையில் தற்போது பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் பிரசவம் பார்ப்பதற்கு பயன்பட்டுள்ளது. மின்சாரத்தில் இயங்கும் இந்த வகை காரில் ஆட்டோ மோட் இருக்கிறது. டிரைவர் ஓட்டாமலே குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல வேண்டும் என நாம் பதிவுசெய்துவிட்டால். அந்த கார் தன்னிச்சையாகவே செயல்பட்டு நாம் போகும் இடத்திற்கு நம்மை சேர்த்துவிடும்.

tesla baby, woman gives birth in tesla car, woman gives birth car autopilot, woman delivers child tesla autopilot car, viral news, indian express

அமெரிக்காவின் ஃபிலடெல்ஃபியா பகுதியைச் சேர்ந்த தம்பதி கீட்டிங் ஷெர்ரி-யிரான் ஷெர்ரி. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் இருக்கிறார். மேலும் யிரான் ஷெர்ரி கர்ப்பமாகவும் இருந்தார். இச்சூழலில் மகனை பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளனர் இந்த தம்பதிகள். அப்போது சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளனர். அந்தச் சமயம் பார்த்து யிரானுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. யிரான் ஷெர்ரியின் பிரசவ வலி அதிகரிக்க, சாலை நெரிசலோ சரியாகவில்லை. இதனால் மருத்துவமனைக்குச் சரியான நேரத்தில் செல்ல முடியாது என்பதை உணர்ந்தார் கீட்டிங் ஷெர்ரி.

Keating and Yiran with Maeve (left) and Rafa

உடனே காரை ஆட்டோ பைலட் மோடுக்கு மாற்றியுள்ளார். மேலும் காரை மருத்துவமனைக்குச் செல்லுமாறு பணித்துள்ளார். அதன்பிறகு பிரசவ வலியால் துடித்த மனைவிக்கு ஆதரவாக இருந்துள்ளார். மருத்துவமனை செல்ல சுமார் 20 நிமிடம் ஆகியுள்ளது. மருத்துவமனையின் வாயிலில் கார் நுழைந்தவுடனே குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்தது. உடனே அங்கு வந்த நர்ஸ்கள் காரில் வைத்தே தொப்புள்கொடியை அறுத்தனர். இந்தக் குழந்தை தான் உலகின் முதல் டெஸ்லா குழந்தை என அழைக்கப்படுகிறது. குழந்தைக்கு டெஸ் என பெயர் வைக்க பெற்றோர் ஆலோசித்து வருகின்றனர்.