இது உங்களுக்கே Over ah தெரியல..! டாய்லெட் பேப்பர் வேணுமா விளம்பரத்தைப் பாருங்கள்..!

 
1 1

சைனா இன்சைடர் என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோ, சமூக ஊடக பயனர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது மட்டுமல்லாமல், ஏராளமான விமர்சனங்களையும் பெற்றுள்ளது. அதாவது  பொது கழிப்பறைகளில் முதலில் ஒரு விளம்பரத்தைப் பார்க்காமல் கழிப்பறை காகிதம் கிடைக்காதாம். 

சீனாவில் உள்ள பொது கழிப்பறைகளில் Toilet Paper வேண்டுமெனில் QR Code-ஐ ஸ்கேன் செய்து விளம்பரத்தை பார்க்க வேண்டும் என்ற வித்தியாசமான நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது... அவசரமான காலங்களில் ஒருவரின் ஃபோனில் சார்ஜ்/ இண்டர்நெட் இல்லாவிட்டால் என்னாகும்? என பலர் கேள்வி எழுப்பும் நிலையில், பேப்பர் வீணாவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை என விளக்கம்.