• April
    25
    Thursday

Main Area

Main



சியோமி நிறுவனத்தின் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்

gaming
gaming
Loading...

பெய்ஜிங்: சியோமி நிறுவனத்தின் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சியோமி நிறுவனத்தின் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஷேடோ பிளாக், ஃபுரோஸன் சில்வர் மற்றும் மிரேஜ் புளு ஆகிய மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் சிக்னல் சீராக கிடைக்க X-வடிவத்தில் பிரத்யேக ஆண்டெனா வடிவமைப்பு கொண்டிருக்கிறது. மேலும் ஸ்மார்ட்போனின் பின்புறம் ஆர்.ஜி.பி லோகோ, டிஸ்பிளேவில் பிரெஸ் சென்சிட்டிவ் கண்ட்ரோல்கள், ஏ.ஐ கேமிங் அனுபவம் வழங்கப்பட்டிருக்கிறது. லிக்விட் கூலிங் 3.0 தொழில்நுட்பம், இன்-டிஸ்ப்ளே விரல்ரேகை சென்சார் ஆகியவை உள்ளன.

விலை விபரம்:

6ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி : 3199 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.32,710) என்றும்,

8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி : 3499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.35,780) என்றும்,

8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி : 3799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.38,850) என்றும்

12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி : 4199 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.42,940)

சியோமி பிளாக் ஷார்க் 2 சிறப்பம்சங்களை பொறுத்தவரை 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 855 என்.எம் பிராசஸர்,  ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், டூயல் சிம் ஸ்லாட், 48 எம்.பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 12 எம்.பி டெலிபோட்டோ கேமரா, 20 எம்.பி. செல்ஃபி கேமரா, இன்-டிஸ்ப்ளே விரல்ரேகை சென்சார், டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி, 4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி, 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகியவை இடம்பிடித்துள்ளன.

2018 TopTamilNews. All rights reserved.