• June
    20
    Thursday

Main Area

Main



தனது முதல் லேப்டாப்பை அறிமுகம் செய்தது சியோமி !!

ரெட்மீபுக் 14
ரெட்மீபுக் 14
Loading...

சியோமி நிறுவனம், சீனாவில் அறிமுகப்படுத்தவுள்ள புதிய ஸ்மார்ட்போனுடன் லேப்டாப் ஒன்றையும் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வாரத்தில், அந்த ஸ்மார்ட்போனின் பெயரை அந்நிறுவனத்தின் பொது மேலாளர் தற்போது வெளியிட்டுள்ளார்.

xiaomi laptop

கே20 என பெயரிடப்பட்டிருந்த இந்த ஸ்மார்ட்போன், அந்த நிறுவனத்தின் 'கில்லர்' தொடரில் அறிமுகமாகவுள்ள முதல் ஸ்மார்ட்போன் ஆகும். ஆனால் அந்த லேப்டாப் குறித்து எந்த தகவலையும் அந்நிறுவனம்வெளியிடவில்லை. ஆனால், தற்போது இந்த லேப்டாப் குறித்த தகவல்கள் இணையதளத்தில் வெளியாகி வருகிறது. 'ரெட்மீபுக் 14' என பெயரிடப்பட்டுள்ள இந்த லேப்டாப், கே20 ஸ்மார்ட்போனின் அறிமுகத்தின்பொழுது அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது. ரெட்மீ மற்ற பொருட்கள் எப்படி மலிவு விலையில் கிடைக்கப்பெருகிறதோ, இந்த லேப்டாப்பின் விலையும் அவ்வாறே அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

mi laptop


இரு தளங்களில் இதனை பற்றி தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. (ப்ளூடூத் சிக்), தன் தளத்தில் இந்த 'ரெட்மீபுக் 14' லேப்டாப் பற்றிய தகவல்களை முதலில் வெளியிட்டது. இந்த தகவல்களை உறுதி செய்யும் வகையில் பிரபல தொழில்நுட்ப வல்லுனர் இஷான் அகர்வாலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளார். இவர், இந்த தகவல்களை மை ஸ்மார்ட் ப்ரைஸ் என்ற தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அகர்வால் கூறும் தகவல்களின்படி, இந்த லேப்டாப் 14-இன்ச் திரையை கொண்டிருக்கும். இன்டெல் கோர் ஐ3, கோர் ஐ5 மற்றும் கோர் ஐ7 என மூன்று வகையான ப்ராசஸர்களை கொண்டிருக்கலாம். இதில் ஜீஃபோர்ஸ் எம்.எக்ஸ்250 கிராபிக்ஸ் கார்ட் பொருத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த லேப்டாப், 4ஜிபி ரேம் அல்லது 8ஜிபி ரேம் என இரண்டு வகைகளிலும், 256ஜிபி அல்லது 128ஜிபி ஃப்ளாஷ் மெமரியையும் கொண்டிருக்கும் என கூறியுள்ளார். மற்றும், ப்ளூடூத் சிக் இந்த 'ரெட்மீபுக் 14' லேப்டாப் ப்ளூடூத் v4.0 வசதி கொண்டிருக்கும் என கூறியுள்ளது.
இணையதளத்தில் வெளியாகி, பரவலாக பகிறப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த லேப்டாப்பின் சிறப்பம்சங்கள் அடங்கிய ஒரு புகைப்படத்தில், உலோகத்தினால் தயாரிக்கபடவுள்ள இந்த லேப்டாப் 1.3 கிலோ எடை கொண்டிருக்கும், 'சில்வர்' என்ற ஒரே வண்ணத்தில்தான் வெளியாகப்போகிறது. 4ஜிபி ரேம் அல்லது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி அல்லது 128ஜிபி ஃப்ளாஷ் மெமரி கொண்ட இந்த லேப்டாப்பில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் பொருத்தப்பட்டிருக்கும் பொன்ற தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. மேலும் இந்த லேப்டாப், விண்டோஸ் 10 அமைப்பை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

2018 TopTamilNews. All rights reserved.