• 12
    புதன்
  • 12
    டிசம்பர்

Main Area

Main

ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம் 

athangarai

திருநெல்வேலி:

நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தர்காக்களில் திசையன்விளை அருகே அமைந்துள்ள ஆத்தங்கரை தர்காவும் ஒன்றாகும் .

athangarai

இந்த பள்ளிவாசலில்  ஆண்டு தோறும் கந்தூரி விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்தாண்டிற்கான கந்தூரி விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. 

இதையொட்டி நேற்று அதிகாலை கத்முல் குர்ஆனுடன் விழா தொடங்கியது. அதனையடுத்து காலை 10 மணிக்கு அரண்மனை புலிமான்குளத்தில் இருந்து யானை மீது கொடி, சந்தனகுடம் ஆகியன பரம்பரை டிரஸ்டி ஹபிபுர் ரகுமான் பிஜிலி தலைமையில் ஊர்வலமாக தர்காவுக்கு புறப்பட்டது.

அதனை தொடர்ந்து 11.45 மணிக்கு கொடி ஊர்வலம் தர்காவை அடைந்தது. பரம்பரை டிரஸ்டி ஹபிபுர் ரகுமான் பிஜிலி யானையில் இருந்தவாறு பள்ளிவாசல் முன்பு கொடியேற்றினார். அதன் பின்னர் தர்காவில் சந்தனம் மெழுகுதல் நிகழ்வு நடைபெற்றது.

athangarai

பின்னர் தர்காவில் பச்சை நிற போர்வை போர்த்தப்பட்டு பூ அணிவிக்கப்பட்டு சிறப்பு துவா ஓதப்பட்டது. இரவில் இஸ்லாமியர்களின் மார்க்க சொற்பொழிவும் இன்னிசை கச்சேரியும் நடைபெற்றது.

இதில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து மட்டுமில்லாமல் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

athangarai

விழாவில் இன்று வியாழக்கிழமை அதிகாலையில் நன்றி நவிலல், சிறப்பு துவா ஓதுதல், நேர்ச்சை வினியோகம் ஆகியன நடைபெறுகிறது. கந்தூரி விழாவை முன்னிட்டு நெல்லை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.

விழா ஏற்பாடுகளை பள்ளிவாசல் பரம்பரை டிரஸ்டிகள் நயாஸ் அகமது பிஜிலி, ஹபிபுர் ரகுமான் பிஜிலி ஆகியோர் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர். 

             
2018 TopTamilNews. All rights reserved.