• July
    16
    Tuesday

Main Area

Main



சுட்டுக் கொல்லப்படும் இளைஞர்கள்; டெல்லியில் சைக்கோ கொலைகாரன் நடமாட்டம்?!..

கொலை
கொலை
Loading...

புதுடெல்லி: இளைஞர்கள் தொடர்ந்து சுட்டுக் கொல்லப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாபா ஹரிதாஸ் நகரில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.

svv

கொலை செய்யப்பட்டது பகதூர்கார்க் பகுதியில் வசிக்கும் தருண் என்று தெரிய வந்துள்ளது. இவர் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் பணிபுரிந்து வந்திருக்கிறார். பைக்கில் வந்துகொண்டிருந்த போது பாபா ஹரிதாஸ் நகர் அருகே மர்ம நபர் ஒருவரால் சுடப்பட்டிருக்கிறார். தருணை சுட்ட நபர் அவருடைய பைக் மற்றும் மொபைலை திருடி சென்றிருக்கிறான். உயிருக்கு போராடிய தருணை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள், போகும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டது.

efs

டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகைக்கு தருணின் நண்பர் அளித்துள்ள பேட்டியில், கடந்த சில நாட்களாகவே தருண் மன அழுத்தத்துடன் காணப்பட்டான். ஒரு பிரச்சனையில் மாட்டியிருப்பதாக கூறினான். ஆனால் என்ன பிரச்சனை என்று சொல்ல மறுத்துவிட்டான் என தெரிவித்துள்ளார்.

தருண் கொலை செய்யப்பட்ட இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவை ஸ்கேன் செய்து கொலைகாரனை அடையாளம் காணும் முயற்சி நடைபெற்று வருகிறது. கொலைகாரன் பைக்கை திருடியிருப்பதால், காவல்துறையினருக்கு பைக் பற்றிய தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் தருணின் மொபைலை கண்டறியும் பணியும் நடைபெறுகிறது.

sdcds

இந்தக் கொலை நடப்பதற்கு ஒருநாள் முன்பு ஒரு இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. டெல்லி, ரஞ்சித் சிங் பாலத்தின் அருகே ஒரு இளைஞன் காரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த வழக்கில் அந்த இளைஞனின் பெற்றோர்கள், அவனது நண்பர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறியிருக்கிறார்கள். இந்த இரு வழக்கிலுமே குற்றவாளி யார் என்பது உறுதியாக தெரியவில்லை. சைக்கோ கொலைகாரனாக இருக்கலாம் என மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதையும் வாசிக்க: சமாதானமா?சவாலா? சாய்ஸ் யுவர்ஸ்! : சீமானுக்கு எச்சரிக்கை விடுத்த ராகவா லாரன்ஸ்

2018 TopTamilNews. All rights reserved.